/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
ADDED : டிச 19, 2024 06:52 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 62 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக செயலியோடு கூடிய மொபைல், ஈமச்சடங்கு உதவிதொகை, இறந்த மாற்றுத்திறனாளி வாரிசுக்கு நலவாரிய நிவாரண தொகை என ரூ.12,37,000 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் பழனி பயனாளிகளுக்கு வழங்கி, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உதவி உபகரணங்களை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, செயல்திறன் உதவியாளர் முருகன், பல்நோக்கு உதவியாளர் நெல்சன், பேச்சு பயிற்சியாளர் அபிஷேகா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.