/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு கவர்னர் நிவாரணம் வழங்கல்
/
வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு கவர்னர் நிவாரணம் வழங்கல்
வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு கவர்னர் நிவாரணம் வழங்கல்
வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு கவர்னர் நிவாரணம் வழங்கல்
ADDED : டிச 06, 2024 06:31 AM

வானுார் : மழை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு தமிழக கவர்னர் ரவி நிவாரண பொருட்களை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஆரோவில் பாரத் நிவாசில் நடந்தது.
ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி வரவேற்றார். தமிழக கவர்னர், அறக்கட்டளை தலைவர் ரவி நிவாரண பொருட்களை வழங்கினர்.
குயிலாப்பாளையம், கோட்டக்கரை, இடையஞ்சாவடி, ஆலங்குப்பம், ஆரோவில் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆரோவில் அறக்கட்டளை சார்பில், முதன் முறையாக இந்த நிவாரண உதவிகள் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினர்களான எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன், பேராசிரியர்கள் கவுதம் கோசல், நிரிமா ஓஷா, சர்ராஜூ, நந்தன சூரப்பா பசப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.