/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்டர்வியூவில் தோல்வியால் பட்டதாரி வாலிபர் தற்கொலை
/
இன்டர்வியூவில் தோல்வியால் பட்டதாரி வாலிபர் தற்கொலை
இன்டர்வியூவில் தோல்வியால் பட்டதாரி வாலிபர் தற்கொலை
இன்டர்வியூவில் தோல்வியால் பட்டதாரி வாலிபர் தற்கொலை
ADDED : நவ 14, 2024 05:54 AM

வானுார்: வானுார் அருகே பட்டதாரி வாலிபர், தனியார் நிறுவன இன்டர்வியூவில், தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
வானுார் அடுத்த ஒட்டை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் சரத்பாபு, 24; பி.காம்., பட்டதாரியான இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 11ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கம்பெனி இன்டர்வியூக்கு சென்றுள்ளார்.
அதில், தேர்ச்சி பெறவில்லை. இதனால் 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள ஏரியில் மேய்ந்த, மாடுகளை ஓட்டி வருவதற்கு சென்றுள்ளார். அங்கு மாடு கட்டும் கயிற்றால், அவர் மரத்தில் துாக்குபோட்டுகொண்டார்.
இதனை பார்த்த அவரது தந்தை, சரத்பாபுவை மீட்டு, வானுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

