/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சரஸ்வதி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சரஸ்வதி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 28, 2025 11:06 PM

திண்டிவனம்,: கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் 14ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, ராமதாஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் மணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் வீரமுத்து வரவேற்றார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை உரையாற்றினார்.
விழாவில், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங் கிணைப்பு குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, மாணவ, மாணவிகள் 379 பேருக்கு பட்டம் வழங்கி பேசினார். விழாவில் 28 முதுகலை பட்டமும், ஒருவருக்கு முனைவர் ஆராய்ச்சி பட்டமும் வழங்கப்பட்டது.
விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ், மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி நிர்வாக அலுவலர் சிவா நன்றி கூறினார்.