/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்க் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
தமிழ்க் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 22, 2024 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் தமிழ், கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, மயிலம் 20ம் பட்ட ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் 515 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் துறைத் தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் வள்ளி நன்றி கூறினார்.