/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாடிபள்ளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
/
பாடிபள்ளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 18, 2025 12:54 AM

செஞ்சி ; செஞ்சி ஒன்றியம் பாடிப்பள்ளம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சித் தலைவர் தாட்சாயினி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சஞ்சய் காந்தி தீர்மானங்களை வாசித்தார். இதில் கிராம வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது, கனவு இல்ல திட்டம் மற்றும் மறுவீடு கட்டமைப்பு பயனாளிகளை தேர்வு செய்தனர். சென்னாலுார், பாடிபள்ளம் வனப்பகுதியில் புதிய சாலை அமைக்க அனுமதி அளித்த வனத்துறைக்கு நன்றி தெரிவித்தும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றினர்.
மின்வாரியம் சார்பில் சோலார் மின்சாரம் அமைப்பதன் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
இதில் ஒன்றிய பற்றாளர் மரியம்மாள், துணை தலைவர் ஆனந்தன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.