ADDED : அக் 02, 2024 11:46 PM

விழுப்புரம் : கோலியனுார் ஒன்றியம், பொய்யப்பாக்கத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபா கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் சந்திரா சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ராஜவேல், வெங்கடசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில், ஆண்டிற்கு ௪ முறை நடந்த கிராம சபாக்கூட்டங்களை, தற்போது 6 முறை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
கூட்டத்தில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வி கேசவன், நிர்வாகிகள் சந்திரசேகர், சக்கரவர்த்தி, சத்யராஜ், அர்ச்சுணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செஞ்சி
செஞ்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபாவிற்கு ஊராட்சி தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, முல்லை, ஒன்றிய கவுன்சிலர் புவனா செந்தில்குமரன், துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் செல்வகுமார் தீர்மானங்களை வாசித்தார். இதில் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தொகுதி, காணை வீரமூரில் நடந்த கிராம சபா கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவி ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., சிவகுமார் வரவேற்றார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
பி.டி.ஓ., சீனுவாசன், வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தி, ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்டாச்சிபுரம்
கண்டாச்சிபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவிரவிக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறியாளர் குணசேகரன், துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி வளர்ச்சித் திட்டப்பணிகள்,ஜல் ஜீவன் இயக்கம், சுகாதார இயக்கம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவதிக்கப்பட்டது. மன்ற உறுப்பினர் செல்வராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் அனந்தராமன் செய்திருந்தார்.
மயிலம்
செண்டூர் கிராமத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் கிரிஜா வரவேற்றார்.கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் சக்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மயிலம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம்துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், ஊராட்சி செயலாளர் சங்கர்,மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.