/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.புதுார் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
/
வி.புதுார் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
ADDED : நவ 02, 2025 03:59 AM

விழுப்புரம்: வளவனுார் அருகே வி.புதுார் ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். லட்சுமணன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றனர். ஊராட்சி தலைவர் சீத்தா மலையாளம் வரவேற்றார்.
வி.புதுாருக்கு இயங்கிய டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். வி.புதுார் - பூசாரிபாளையம் சாலை சீரமைக்க வேண்டும். சேதமடைந்த மினி குடிநீர் டேங்குகளை புதுப்பித்து செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கூட்டத்தில், லட்சுமணன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.
கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வகுமரன், ராஜாமணி, தி.மு.க., நிர்வாகிகள் ஆனந்தராஜ், அருண்குமார், செல்வகுமாரி பிரபாகரன், முருகன், ராஜகுரு, ரஞ்சித், பிரகதீஸ்வரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முத்துசாமி, ராஜா மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

