/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலம் காக்கும் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
/
நலம் காக்கும் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : நவ 02, 2025 03:58 AM

விழுப்புரம்: கோலியனுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சுகாதாரத் துறை சார்பில், கோலியனுார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமை கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பிரியா, பி.டி.ஓ.,க்கள் ஜெகநாதன், கண்ணன் முன்னிலை வகித்தனர்.
கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, வழக்கறிஞர் கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மருத்துவரணி செந்தில், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர். துணைச் செயலாளர்கள் ஜெயபால், ஸ்ரீதர், ஜெயந்தி, சவுந்தரராஜன், பொறுப்புக்குழு உறுப்பினர் முருகன், நகர இளைஞரணி மணிகண்டன், கலை இலக்கிய அணி ராவணன், விளையாட்டு மேம்பாட்டு அணி ஐயப்பன், ஐய்யனார், சிவகுரு, குணசேகரன், மகாதேவன், மனோகர், சம்பத், பெருமாள் பங்கேற்றனர்.
முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மகப்பேறு சிறப்பு சிகிச்சை, ரத்தம், எக்கோ, இ.சி.ஜி., எக்ஸ்ரே பரிசோதனைகள் என 17 சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

