நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திரதினத்தையொட்டி, இன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுசெலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, துாய்மையான குழநீர் வினியோகம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.