
திண்டிவனம் மரக்காணம் ஒன்றியம், கோவடி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் உமாவதி மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி பேசினார்.
கூட்டத்தில், குடிநீர் வசதிக்கு புதிய குழாய்களை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஊராட்சி துணை தலைவர் ஏழிலரசி, ஒன்றிய கவுன்சிலர் விநாயகம், ஊராட்சி செயலாளர் மண்ணாங்கட்டி, வி.ஏ.ஓ.,செந்தில்குமார் பங்கேற்றனர்.
கண்டாச்சிபுரம் கண்டாச்சிபுரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீவானந்தம், கூடுதல் பி.டி.ஓ., ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மீனாகுமாரி ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கிராம சுகாதாரம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. துணை தாசில்தார் பாலச்சந்திரன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் அனந்தராமன் செய்தார்.
செஞ்சி மாத்துார் திருக்கை ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் தேவகடாட்சம் தலைமை தாங்கினார்.
பி.டி.ஓ., ராமதாஸ் முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். ஊராட்சி செயலாளர் அறிவழகி வரவு, செலவு மற்றும் கிராமசபை தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது. மக்கள் தங்குமிடம் இயக்கம் மூலம் வரும் நிதியாண்டிற்கான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் ரஞ்சித், துணை தலைவர் கன்னியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

