ADDED : ஜூலை 23, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணையில் பள்ளிக்கு சென்ற பேத்தியை காணவில்லை என பாட்டி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
காணையைச் சேர்ந்தவர் அய்யப்பன் மகள் நிஷாந்தினி, 14; இவர் அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சிறுமியின் பாட்டி பானுமதி அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.