/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் மயானக் கொள்ளை ஊர்வலம்; சப் கலெக்டர் தலைமையில் ஆலோசனை

ADDED : மார் 05, 2024 11:52 PM

திண்டிவனம் : திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை ஊர்வலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் மயானக்கொள்ளை விழா வரும் 9ம் தேதி மதியம் 12:00 மணியளவில் நடைபெற உள்ளது.
இதையொட்டி திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்திற்கு, சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் தலைமை தாங்கினார். டவுன் டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன், தாசில்தார் சிவா, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தாரனேஸ்வரி மற்றும் அங்காளம்மன் கோவில் அறங்காவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மயானக் கொள்ளை ஊர்வலத்தில் இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சூலம், வேல், கத்தி ஆகியவற்றை எடுத்து வரக்கூடாது. காகிதத்தால் ஆன பொருட்களை எடுத்து வரவேண்டும். அருள் வந்து ஆடுபவர்கள், உடன் செல்பவர்கள் அரசியல் கட்சி கொடிகளை கொண்டு செல்லக்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.