/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராவல் மண் கடத்தல் டிராக்டர் பறிமுதல்
/
கிராவல் மண் கடத்தல் டிராக்டர் பறிமுதல்
ADDED : நவ 16, 2025 03:36 AM
மரக்காணம்: மரக்காணம் அருகே கிராவல் மண் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் ஏரியில் நிலத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக கூறி அந்த பகுதியில் உள்ள வீட்டு மனைக்கு டிராக்டர் மூலம் கிராவல் மண்ணை கடத்தி விற்பனை செய்வதாக பிரம்மதேசம் வி.ஏ.ஓ.,விற்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் வி.ஏ.ஓ., கிருஷ்ணமூர்த்தி பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஏரிக்கு சென்ற போது டிராக்டரில் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது.
இதனையெடுத்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஆலங்குப்பத்தை சேர்ந்த சிவா, 40; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

