ADDED : மார் 11, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : திண்டிவனம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் ஆதிபராசக்தியாய், பூங்கப்பரை காளி வேஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக மயானக் கொள்ளை புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.
அர்ஜூனன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் பிர்லா செல்வம், சரவணன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

