/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்புக் கூட்டம் : 571 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம் : 571 மனுக்கள் குவிந்தன
ADDED : ஜன 06, 2026 03:29 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 571 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 571 மனுக்கள் பெறப்பட்டது.
அதில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றம் உட்பட பல்வேது துறைசார்ந்த மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது தீர்வு காண அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சப் கலெக்டர் முகுந்தன், பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் தமிழரசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பல்கேற்றனர்.

