/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்புக் கூட்டம் ; 604 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம் ; 604 மனுக்கள் குவிந்தன
ADDED : அக் 14, 2025 06:58 AM
விழுப்புரம்; விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 604 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை பெற்று, விசாரணை செய்து, மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், முதியோர் உதவிதொகை, வீட்டுமனைப் பட்டா கோருதல், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 604 மனுக்கள் பெறப் பட்டது.
சப்-கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.