/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர வியாபாரிக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
/
மர வியாபாரிக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
ADDED : அக் 14, 2025 06:58 AM
திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே மர வியாபாரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த புத்தனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 53; மர வியபாரி. இவர், எம். குன்னத்துார் பகுதியில் உள்ள வையாபுரி என்பவரது மர பட்டறையில் வீட்டின் வாசல் படி செய்ய மரம் கொடுத்திருந்தார்.
செய்து வைத்திருந்ததை வாசல் படியை பழனி கடந்த 11ம் தேதி காலை 9:00 மணியளவில் எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் இரவு 8:00 மணியளவில் பழனி பைக்கில் எம்.குன்னத்துார் வந்தபோது அதே பகுதியை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ், வையாபுரி மகன் ராஜா, ரமேஷ் மகன் ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பழனியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பழனி அளித்த புகாரின் பேரில், ரஜேஷ் உட்பட 3 பேர் மீது திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து ரமேஷ்,43; ராஜா, 39; ஆகிய இருவரையும் கைது செய்த னர்.