/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உயர் மட்ட மேம்பால பணி அடிக்கல் நாட்டு விழா
/
உயர் மட்ட மேம்பால பணி அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜன 28, 2024 07:10 AM

விக்கிரவாண்டி, :விக்கிரவாண்டி ஒன்றியம் பிடாரிப்பட்டில் உயர் மட்ட மேம்பாலம் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
விக்கிரவாண்டி ஒன்றியம் பிடாரிப்பட்டில் வராக நதியில் நபார்டு திட்டத்தில், ரூபாய் 6.20 கோடி மதிப்பில் பிடாரிப்பட்டு- அணிலாடி உயர் மட்ட மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சுமதி வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் சிறப்பு பூஜை செய்து மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார்.
செயற்பொறியாளர் ராஜா, பி.டி.ஓ., முபாரக் அலி பேக், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி , பொறியாளர் முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சத்யா கோபாலகிருஷ்ணன், முகிலன், அருணாச்சலம்,ஊராட்சி மன்ற தலைவி ஆனந்தி,மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.