/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் ரூ. 4.83 கோடியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை
/
அரசு கல்லுாரியில் ரூ. 4.83 கோடியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை
அரசு கல்லுாரியில் ரூ. 4.83 கோடியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை
அரசு கல்லுாரியில் ரூ. 4.83 கோடியில் கூடுதல் கட்டடம் கட்ட பூமி பூஜை
ADDED : மே 20, 2025 11:37 PM

விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் 4.83 கோடி ரூபாய் மதிப்பில், ஆய்வகங்களுடன் கூடிய வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் உயர்கல்வி துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளை நேற்று துவக்கி வைத்தார்.
இதில், விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில், ஆய்வகங்களுடன் கூடிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், லட்சுமணன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். ரூ.4.83 கோடி மதிப்பில் 2 தளங்கள் கொண்ட கட்டடத்தில், 6 வகுப்பறைகள், 3 ஆய்வகம், 5 கழிவறைகள் கட்டப்பட உள்ளது.
அதேபோல், விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர்., மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2.45 கோடி ரூபாய் மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டும் பணியும் துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, அரசு கல்லுாரி முதல்வர் சிவக்குமார், பொதுப்பணி துறை (தொழில் நுட்பக் கல்வி) உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.