/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.23.86 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
/
ரூ.23.86 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
ரூ.23.86 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
ரூ.23.86 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை
ADDED : மார் 06, 2026 03:30 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த முட்ராம்பட்டு - புதுச்சேரி குமராப்பாளையம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 23.86 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டுமான பணி!க்கு பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் வாசன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை கடலுார் கோட்ட பொறியாளர் கோதை, திண்டிவனம் உதவி கோட்ட பொறியாளர் லட்சுமிகலா, உதவி பொறியாளர்கள் வெங்கடேசன் மணிகண்டதாஸ் முன்னிலை வகித்தனர். முட்ராம்பட்டு ஊராட்சி தலைவர் ராஜி வரவேற்றார். ரவிக்குமார் எம்.பி., பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் மதியழகன், ஆதிநாராயணன், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் மகேந்திரவர்மன், வி.சி., மாவட்ட பொருளாளர் பால்வண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துகுமரன், தண்டபாணி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, ஒன்றிய தொழில்நட்ப அணி அமைப்பாளர் ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

