/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
/
உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஆக 29, 2025 11:46 PM

செஞ்சி : ஆலம்பூண்டியில் தமிழக அரசின் சார்பில் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியை தொடராத மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர்ந்து படிப்பை தொடர் வதற்கான 'உயர்வுக்கு படி' வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார், ஸ்ரீரங்கபூபதி கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தனர்.
சி.இ.ஓ., அறிவழகன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான கல்லுாரிகளின் சேர்க்கை உத்தரவை வழங் கினார்.
திறன் பயிற்சி மாவட்ட உதவி இயக்குனர் நடரா ஜன் திட்டம் குறித்து விளக்கி பேசினார்.இதில் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், கல்லுாரி பேராசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவை சேர்ந்த 26 பள்ளிகளில் இருந்து 397 மாணவர்கள் பங்கேற்றனர்.
திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.