/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா விற்பனை பங்க் கடைக்கு சீல்
/
குட்கா விற்பனை பங்க் கடைக்கு சீல்
ADDED : மார் 14, 2024 11:29 PM
வானுார்: ஆரோவில் அருகே பங்க் கடையில் 1500 கிராம் குட்காவை, போலீசார் பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், புதுச்சேரி கோரிமேடு எல்லை சந்திப்பில் உள்ள ஒரு கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக ஆரோவில் போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து வானுார் உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன், ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமர் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள பங்க் கடையில் சோதனை செய்தனர்.
கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,500 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த செந்தில், 43; என்பவர் மீது வழக்குப்பதிந்து கடைக்கு சீல் வைத்தனர்.

