ADDED : செப் 28, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ஜெயபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்குள்ள பங்க் கடையில் சோதனை நடத்தினர். அங்கு, குட்கா விற்றது தெரியவந்தது. உடன் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மேகநாதன், 40; என்பவரை கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.