/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா கடத்தியவர் குண்டாசில் கைது
/
குட்கா கடத்தியவர் குண்டாசில் கைது
ADDED : அக் 16, 2025 11:36 PM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே காரில் குட்கா கடத்திய நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டு பகுதியில், திருவெண்ணைநல்லுார் போலீசார், கடந்த மாதம் 16ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெங்களூருவிலிருந்து குட்கா, பொருட்கள் கடத்தி வந்த காரை பறிமுதல் செய்த போலீசார், புதுச்சேரி மாநிலம் பாகூர் தாலுகா நிர்ணயப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் கதிரவன், 38; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 120 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து குட்கா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அவர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டருக்கு, எஸ்.பி., சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் உத்தரவை தொடர்ந்து, திருவெண்ணை நல்லுார் போலீசார், கதிரவனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, நேற்று கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.