நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : பெட்டி கடையில் ஹான்ஸ் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் நேற்று பகல் 12 மணியளவில் வல்லம் கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றியல் திடீர் சோதனை நடத்தினர்.
அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான ஹான்ஸ் பாக்கெட்டுக்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளர் தென்னரசு 35, என்பவரை கைது செய்தனர். அவரது கடையில் இருந்த 75 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.