/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆய்வுக் கூட்டம்
/
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆய்வுக் கூட்டம்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆய்வுக் கூட்டம்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆய்வுக் கூட்டம்
ADDED : ஜூலை 28, 2025 02:08 AM

விழுப்புரம்:விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தாய்மை இறப்பு விகிதம், குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு விகிதம், கர்ப்பிணி பெண்கள் பதிவு, குறைமாத பிறப்பு எடை, ரத்த சோகை திருத் தம், பாலின விகிதம், இளம் வயது கர்ப்பம், மக்களைத் தேடி மருத்துவம், கிராம வறுமை வளர்ச்சி குழு உள்ளிட்ட சுகாதாரக் குறியீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்குதல் திட்டத்தின்கீழ் 1 முதல் 18 வயதிற்குட்ட பள்ளி மற்றும் கிராமப்புற குழந்தைகளுக்கு குடற்புழு நீக்குத ல் தொடர்பாக களப்பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சென்று குடற்புழு நீக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அப்போது, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, மருத்துவம் மற்றும் ஊரக நலவாழ்வு இணை இயக்குனர் ரமேஷ் பாபு, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.