/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பனையபுரத்தில் நலம் காக்கும் திட்ட மருத்துவ முகாம்
/
பனையபுரத்தில் நலம் காக்கும் திட்ட மருத்துவ முகாம்
ADDED : அக் 05, 2025 03:42 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார்.
சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில் குமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் வரவேற்றார்.
முகாமை அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசினார்.
ராதாபுரம் வட்டார அரசு மருத்துவ மனை டாக்டர்கள் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், தாசில்தார் செல்வமூர்த்தி, டாக்டர் ஆறுமுகம், விஜயபாபு, நதியா, குழந்தைகள் நல அலுவலர் மனோ சித்ரா, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ராமாராவ், ஊராட்சி தலைவர்கள் சங்கர், காந்தரூபி வேல்முருகன், பூவராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.