/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பூத் முகவர்கள் கூட்டம்
/
தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பூத் முகவர்கள் கூட்டம்
தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பூத் முகவர்கள் கூட்டம்
தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பூத் முகவர்கள் கூட்டம்
ADDED : அக் 05, 2025 03:30 AM

விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருக்கோவிலுார், விக்கிரவாண்டியில் இன்று ஓட்டுச்சாவடி முகவர்கள் 2 மற்றும் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி அறிக்கை :
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் 2 மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு திருக்கோவிலுார் தேவிமுருகன் மண்டபத்தில் நடக்கிறது.
தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜெயராம் மண்டபத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் 2 மற்றும் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமையில் நடக்கவுள்ளது.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், தலைமை தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், ஜெயராஜ், தலைமை வழக்கறிஞர் சுவைசுரேஷ், மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பூத் முகவர்கள் 2, தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.