/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் மழை அவலுார்பேட்டையில் 10 செ.மீ., பதிவு
/
விழுப்புரம் மாவட்டத்தில் மழை அவலுார்பேட்டையில் 10 செ.மீ., பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் மழை அவலுார்பேட்டையில் 10 செ.மீ., பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் மழை அவலுார்பேட்டையில் 10 செ.மீ., பதிவு
ADDED : அக் 05, 2025 03:25 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில், கடந்த ஒரு வார காலமாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரங்களில் ஒரு சில தினங்களாக திடீர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு பிறகு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை காலை 5:00 மணி வரை பரவலாக தொடர்ந்தது.
விழுப்புரம் நகரில் பெய்த பலத்த மழையால், கீழ்ப்பெரும்பாக்கம் ரயில்வே தரைப்பாலம், புதிய பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணி நடந்தது. இதே போல், விழுப்புரம் நகராட்சி மைதானம், பெருந்திட்ட வளாக மைதானம், ரயில்வே மைதானங்களில் மழை நீர் தேங்கியது. நகராட்சி பூங்காவிலும் மழை நீர் குளம் போல தேங்கியது.
மகாராஜபுரம் தாமரை குளம், சித்தேரிக்கரை, சாலாமேடு, வழுதரெட்டி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அங்கு பல இடங்களில் சாலையிலும் மழை நீர் தேங்கியதால், பொது மக்கள் அவதிப்பட்டனர். காணை உள்ளிட்ட புறநகர் கிராமங்களில் மின் வெட்டு ஏற்பட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல, திண்டிவனம், வானுார், செஞ்சி, கண்டமங்கலம், காணை என மாவட்டம் முழுவதும், நள்ளிரவு முதல் அதிகாலை வரை விட்டு, விட்டு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அவலுார் பேட்டையில் அதிகளவாக 10 செ.மீ., மழை பதிவானது.
மாவட்டத்தில் மழையளவு (மி.மீ) விழுப்புரம் 21, கோலியனுார் 30, வளவனுார் 38, கெடார் 27, முண்டியம்பாக்கம் 86, நேமூர் 73, கஞ்சனுார் 70, சூரப்பட்டு 37, வானுார் 36, திண்டிவனம் 40, செஞ்சி 45, செம்மேடு 98, வல்லம் 33, அனந்தபுரம் 29, அவலுார்பேட்டை 103, மணம்பூண்டி 65, முகையூர் 66, திருவெண்ணைநல்லுார் 32. மொத்தம், 992.60 மி.மீ., சராசரி 47.27.மி.மீ.