/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனமழை எதிரொலி முகாம்கள் ஒத்திவைப்பு
/
கனமழை எதிரொலி முகாம்கள் ஒத்திவைப்பு
ADDED : டிச 13, 2024 07:08 AM
விழுப்புரம்: கனமழையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த சிறப்பு முகாம்கள் ஒத்திவைக்கப்படுட்டுள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், பாதிப்புக்குள்ளான திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, வானுார், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாக்களில் இன்று 13ம் தேதி மற்றும் நாளை 14ம் தேதிகளில் வெள்ளத்தில் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டுகளை இழந்தோருக்கு சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டது.
தொடர் கனமழை காரணமாக இந்த சிறப்பு முகாம்கள் ஒத்திவைக்கப்படுகிறது. சிறப்பு முகாம்களுக்கான அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

