/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் பலத்த மழை குடியிருப்புகளில் மழைநீர்
/
விழுப்புரத்தில் பலத்த மழை குடியிருப்புகளில் மழைநீர்
விழுப்புரத்தில் பலத்த மழை குடியிருப்புகளில் மழைநீர்
விழுப்புரத்தில் பலத்த மழை குடியிருப்புகளில் மழைநீர்
ADDED : அக் 07, 2024 07:57 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று இரவு மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக, இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு தொடங்கி மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது. அதிகாலை 4:00 மணி வரை பெய்தது.
இந்த மழையால் விழுப்புரம் இந்திரா நகர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால், பேரி காட் போட்டு தற்காலிகமாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. மகாராஜபுரம் தாமரைகுளம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சாலையிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது.
மாவட்டத்தில் நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:
விழுப்புரம் 44, கோலியனுார் 31, வளவனுார் 28, கெடார் 3, முண்டியம்பாக்கம் 13, நேமூர் 10.20, கஞ்சனுார் 11, சூரப்பட்டு 18, வானுார் 23, திண்டிவனம் 5, மரக்காணம் 8, அரசூர் 22, திருவெண்ணெய்நல்லுார் 19 மி.மீ., பதிவானது. மாவட்டத்தில் 238 மி.மீ., சராசரி 12 மி.மீ., மழை பதிவானது.