/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி
/
வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி
வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி
வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி
ADDED : டிச 03, 2024 06:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நேற்று இரவு நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், கனமழை வெள்ளத்தில் சிக்கிய பொது மக்களை மீட்கும் பணியில், 11 பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மீட்பு குழுவினர் செல்லமுடியாத இடங்களில் சிக்கியவர்களை மீட்பதற்கு, மாவட்ட நிர்வாகம் கோரிக்கை ஏற்று, கோயம்புத்தூரிலிருந்து, ராணுவ ஹெலிகாப்டர் நேற்று இரவு 7.00 மணிக்கு மீட்பு பணிக்காக விழுப்புரம் வந்தது.
அதன் மூலம், விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் தொட்டிக்குடிசை பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 2 பேரை மீட்க முயன்றனர். ஆனால், மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததால், மீட்க முடியாமல் போனது.
இதனையடுத்து, அருகே அரசூர் வராகி அம்மன் கோவிலில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த 10 பேரை மீட்கவும், தொடர்ந்து, அருகே ஆற்றுமணல் திட்டு பகுதியில் சிக்கி தவித்த 3 பேரையும் மீட்கவும் சென்றனர்.
ஆனால், தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீட்க முடியாமல் ஹெலிகாப்டர் திரும்பியது. எனினும், இரவு மழைவிட்டு பிறகு, ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.