/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
/
செஞ்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 22, 2025 09:09 AM

செஞ்சி : செஞ்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் ஊர்வலம் நடந்தது.
செஞ்சி வட்டார போக்கு வரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் ஊர்வலம் நடந்தது. சேத்துப்பட்டு சாலையில் துவங்கிய ஊர்வலத்திற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகவேல் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார். சங்கராபரணி ஆற்று பாலத்தில் துவங்கிய ஊர்வலம் திண்டிவனம் ரோடு, விழுப்புரம் ரோடு, சத்திரத்தெரு , திருவண்ணாமலை சாலை வழியாக நடந்தது.
இதில் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.