/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
/
தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு உதவி
ADDED : ஜன 23, 2025 05:54 AM

விழுப்புரம்: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு  எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.
கோலியனுார் ஒன்றியம், ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த  விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் ரூ.5 ஆயிரம், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை மற்றும் மளிகை பொருட்களை நிவாரணம் வழங்கினார்.
இதில், விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, கோலியனுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மும்மூர்த்தி, ஊராட்சி தலைவர் சுரேஷ், கிளை செயலாளர்கள் ராமலிங்கம். எடப்பாளையம் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

