ADDED : ஏப் 12, 2025 09:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : செவலபுரை - சிறுவாடி வராக நதியின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த செவலபுரை - சிறுவாடியில் வராக நதியின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் 5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.
இப்பணிக்காக நடந்த பூமி பூஜையில் செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், காசியம்மாள், ஊராட்சி தலைவர் சசிகலா ஜெய்சங்கர், பி.டி.ஓ., ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.