/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீசாரின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை
/
போலீசாரின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை
ADDED : பிப் 15, 2024 04:54 AM

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட போலீசாரின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும், போலீசாரின் பிள்ளைகளில், கடந்த 2022-23ம் கல்வி ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, அவர்கள், அடுத்து உயர் கல்வி பயில்வதற்கான ஊக்க தொகை வழங்கப்பட்டது.
விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் போலீசாரின் பிள்ளைகள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகளில் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்களுக்கும், ஊக்கத்த தொகையை எஸ்.பி., தீபக்சிவாச் வழங்கினார்.
10ம் வகுப்பில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.13,000, இரண்டாமிடம் ரூ.9,000, மூன்றாமிடம் ரூ.5,000 வழங்கப்பட்டது. பிளஸ் 2வில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.15,000, இரண்டாமிடம் ரூ.11,000, மூன்றாமிடம் பெற்றவருக்கு ரூ.7,000 வழங்கப்பட்டது. பெற்றோர்களுடன் வந்து, மாணவர்கள் ஊக்கத்தொகையை பெற்றனர்.

