/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் திக். திக்..திக்...
/
நெடுஞ்சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் திக். திக்..திக்...
நெடுஞ்சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் திக். திக்..திக்...
நெடுஞ்சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் திக். திக்..திக்...
ADDED : ஏப் 14, 2025 06:27 AM

விழுப்புரம்: கும்பகோணம் நெடுஞ்சாலையோரம் உருவான மெகா சைஸ் அபாயமான பள்ளத்தால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்ட பாதிப்புகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. புயல் காரணமாக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் - பண்ருட்டி இடையில் பல இடங்களில் சாலை தேசமடைந்தது.
கன மழையால் உருவான வெள்ள நீர், வாணியம்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலையில் குறுக்கிட்டு சென்றதால் சாலையோரம் இருந்த மண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் கும்பகோணம் சாலை வாணியம்பாளையம் அருகே மெகா சைஸ் பள்ளம் உருவாகி உள்ளது. இந்த பள்ளங்கள் புயல் கடந்து சென்று 4 மாதம் கடந்தும் இதுவரை சரிசெய்யப்படவில்லை.
இப்பகுதியில் மின் விளக்குகளும் இல்லாததால், இரவு நேரத்தில் சாலையோரம் செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலையோர பள்ளம் பெரும் விபத்துகள் ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.
நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் எதிர் எதிரோ வரும்போது, பைக்குகள் சாலையோரம் ஒதுங்க வழியின்றி சிலர் பள்ளத்தில் விழுந்து செல்கின்றனர்.
ஆபத்தான சாலையோர பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.