/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி அதிருப்தியில் உடன் பிறப்புகள்
/
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி அதிருப்தியில் உடன் பிறப்புகள்
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி அதிருப்தியில் உடன் பிறப்புகள்
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி அதிருப்தியில் உடன் பிறப்புகள்
ADDED : நவ 12, 2024 06:18 AM
விழுப்புரம் வடக்கு மாவட்ட செஞ்சி, திண்டினம், மயிலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையில் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் கோரப் பட்டது.
இப்பணிகளை எடுப்பதற்கு ஆளுங்கட்சியில் உள்ள இளைஞரணி உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள் போட்டி போட்டனர். பணிகளை துறையின் அமைச்சர் இறுதி முடிவு செய்ய வேண்டும் என்பதால், அவரிடம் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாஜி அமைச்சர் உள்ளிட்டோர் சிபாரிசுக்கு சென்றனர்.
கடைசியில் மாஜி அமைச்சர் தனக்கு இருந்த செல்வாக்கால் ஒரு சில பணிகளை பெற்றுக் கொண்டார். இதேபோல் எதிர்கட்சியான அ.தி.மு.க., ஆதரவு ஒப்பந்ததாரர்களுக்கும் பணிகள் நிறைவாக கிடைத்தது.
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு குறைவான பணிகளை ஒதுக்கியதாக, உடன் பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.