ADDED : செப் 06, 2025 08:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; காட்டுச்சிவிரி கிராமத்தில் கிறிஸ்துவ தேவாலயம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டிவனம் தாலுகா, காட்டுச்சிவிரி கிராமத்தில் புதியதாக கிறிஸ்துவ தேவாலயம் கட்டப்படுகிறது. இந்துக்கள் உள்ள இடத்தில் கிறஸ்துவ தேவாலயம் கட்டுவற்கு அனுமதி வழங்கிய, திண்டிவனம் தாசில்தாரை கண்டித்து நேற்று காலை இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் பிரிதிவிராஜ் தலைமை தாங்கினார்.
இந்து முன்னணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் தனபால், பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.