ADDED : ஜூலை 28, 2026 03:17 AM

செஞ்சி: செஞ்சியில், விழுப்புரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் பிரித்விராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சுரேஷ் துரைராஜ் விளக்கி பேசினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பாலு சிறப்புரையாற்றினார்.
நகர செயலாளர் மணிகண்டன், ஒன்றிய பொதுச் செயலாளர் போகிராஜா, ஒன்றிய செயலாளர் நரேஷ், நகர செயலாளர் கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமு நன்றி கூறினார்.
விழுப்புரம் விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சதிஷ்அப்பு தலைமை தாங்கினார்.
நகர தலைவர் ரமேஷ் வரவேற்றார். புதுச்சேரி கோட்ட செயலாளர் முருகையன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், செயலாளர் தனபால், இந்து வியாபாரி நலச்சங்கம் மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர செயலாளர் பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ராஜி, தேசிங்கு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் நன்றி கூறினார்.
