/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தினமலர் மற்றும் டார்லிங் இணைந்து வழங்கும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி
/
தினமலர் மற்றும் டார்லிங் இணைந்து வழங்கும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி
தினமலர் மற்றும் டார்லிங் இணைந்து வழங்கும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி
தினமலர் மற்றும் டார்லிங் இணைந்து வழங்கும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி
ADDED : ஆக 06, 2025 12:56 AM

தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2025
நாள்: 08.08.2025 முதல் 11.08.2025 வரை
காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
இடம்: உப்பளம் புதிய துறைமுகம், புதுச்சேரி
கிராமத்து உணவு
நகரீக வளர்ச்சியால் தற்போது உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு துரித உணவுகளை அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர். இதனால், கிராமத்து உணவு முறைகள் மறைந்து வருகிறது. ஆனால், அந்த கிராமத்து உணவு வகைகள் நம்ம புதுச்சேரி எக்ஸ்போவில் கிடைக்கும். ராகி கூழ், கம்பு கூழ், ராகி அடை, ராகி களி, ஆவாரம் பூ டீ, ராகி லட்டு, திணை அரிசி லட்டு, மிக்ஸ்டு மில்லட் லட்டு, திணை பாயாசம், கருப்பு கவுணி அரிசி கஞ்சி என பலவகையான அறுசுவை உணவுகள் கிடைக்கும். நாவிற்கு ருசியாக சாப்பிட்ட மகிழ வாங்க புதுச்சேரி, உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடக்கும் எக்ஸ்போவுக்கு.
பாரம்பரிய உணவு
பாரம்பரிய உணவு வகைகளான கார பணியாரம், சுவீட் பணியாரம், சுவீட் போளி, தேங்காய் போளி, சிவப்பு அரிசி புட்டு, பால்கோவா போளி, பிடி கொழுக்கட்டை உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளையும் சாப்பிட்டு மகிழலாம். மேலும், உடலுக்கு ஆரோக்கியமான பருத்தி பால் நம்ம பருத்தி கடையில் கிடைக்கும். பருத்தி பாலில் சித்த மருத்துவ பொருட்களை கலந்து கொடுக்கப்படுகிறது. இதனால், உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. இங்கு உடலுக்கு ஆரோக்கியமான பருத்தி பால் குடித்து சுவைக்கலாம்.
சுவையான பர்கர், சாண்ட்விச் பான் பான் ஐஸ் கிரீம் மற்றும் பர்கர் அண்டு சாண்ட்விச், பர்கர், பலுாடா, பிரென்ச் பிரைஸ், டபுள் ஷேக், மில்க் ஷேக், மில்லட் உள்ளிட்டவைகள் கிடைக்கும். தீப் கமலி கடையில், சிக்கன் அத்தோ, பன்னீர் அத்தோ, எக் ரோல், பன்னீர் ரோல், வெஜ் டாகோஸ், சிக்கன் மோமோஸ், வெஜ் மோமோஸ், பிரைடு மோமோஸ், சிக்கன் விங்க்ஸ், ரெட் பாஸ்தா கிடைக்கும்.
மார்பிள்ஸ் அண்டு மெட்டல் கிராப்ட்ஸ்:
வீடுகளை அலங்கரிக்க ராஜஸ்தான் மார்பிள்ஸ் அண்டு மெட்டல் கிராப்ட்ஸ் கோடிக்கணக்கில் செலவு செய்து கனவு இல்லம் கட்டினாலும் அல்லது வாங்கினாலும் இல்லத்திற்குள் அலங்கார பொருட்களை வைத்தால் மட்டுமே பார்ப்பதற்கு கலைநயம் மிக்கதாக இருக்கும். அப்படி அலங்கரிப்பதற்கான பொருட்களை எங்கு தேடியும் அலையாமல் சுலபமாக வாங்குவதற்கு 'ராஜஸ்தான் மார்பிள்ஸ் அண்டு மெட்டல் கிராப்ட்ஸ்' அலங்கார பொருட்கள் அரங்கம் அமைகிறது. இந்த அரங்கில் ராஜஸ்தான் மார்பிள்சில் விநாயகர், சிவன், கிருஷ்ணர், புத்தர் உருவ சிலைகள், பிரம்மாண்ட சிங்கம், பசு மற்றும் யானை, முயல் சிலைகள் விற்பனைக்கு உள்ளது. சிவன் மற்றும் புத்தர் சிலைகளில் நீரூற்றும், பிளைன் மார்பிள்சில் நீரூற்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மார்பிள்சில் வீட்டை அலங்கரிக்கும் குடுவை உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்கள் இடம் பெறுகிறது. நீங்கள் எங்கும் அலையாமல் புதுச்சேரி தினமலர் எக்ஸ்போ அரங்கிற்கு வந்தால் பிடித்த மார்பிள்ஸ் வாங்கிச் சென்று உங்கள் கனவு இல்லங்களை அலங்கரிக்கலாம்.
கலைநயமிக்க டிசைனர் ஜூவல்லரி
பிரிக்க முடியாதது நகையும், பெண்களும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு நகை உள்ளிட்ட அணிகலன்களை அணிவதில் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். இன்றைய சூழலில் தங்கம் விலை விண்ணை எட்டும் அளவிற்கு ராக்கெட்டை விட வேகமாக செல்கிறது. அதனால், தங்க நகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தற்போது கலைநயமிக்க டிசைன் நகைகளுக்கும் கொடுக்கத் துவங்கி விட்டனர். அவ்வாறு டிசைன் நகைகளை எங்கேயும் தேடிச் செல்லாமல், சுலபமாக கிடைக்கும் வகையில் கலைநயமிக்க டிசைனர் ஜூவல்லரி அரங்கம் புதுச்சேரி எக்ஸ்போவில் அமைகிறது. இங்கு, பெண்களுக்கு தேவையான 200க்கும் மேற்பட்ட மாடல்களில் பல்வேறு டிசைன்களால் வடிவமைக்கப்பட்ட செயின்கள், வளையல்கள், நெக்லஸ்கள், கம்மல் உள்ளிட்ட பல்வேறு வகையான அணிகலன்கள் இடம் பெறுகின்றன. புதிதாக அமெரிக்கன் டைமண்ட் நெக்லஸ் விற்பனை செய்யப்படுகிறது. அவை பார்ப்பதற்கு உண்மையான வைரங்களைப் போன்றே காணப்படும். தயாராகுங்க... புதுச்சேரி தினமலர் எக்ஸ்போவிற்கு வந்து நகைகளை வாங்கி குவியுங்கள்.
மல்டி பர்ப்பஸ் பேட்டரி வாட்டர் கன்
வீடு கட்டும்போது வசதியாக பெரிய அளவில் கட்டி விடுகிறோம். ஆனால், அந்த வீட்டை மெயின்டெய்ன் செய்ய படாத பாடுபடுகிறோம். வீடுகளில் தரை, சுவர்கள், 'ஏசி' உள்ளிட்டவைகளை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இதற்காக, ஆட்களை வைத்து சுத்தம் செய்யும் சூழலும் ஏற்படுகிறது. இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் பேட்டரியால் இயங்கக்கூடிய 'மல்டி பர்ப்பஸ் பேட்டரி வாட்டர் கன்' அரங்கம் புதுச்சேரி எக்ஸ்போவில் இடம் பெறுகிறது. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் இந்த வாட்டர் கன் மூலம் தரை, சுவர்கள், 'ஏசி' மற்றும் ஜன்னல்கள் போன்றவற்றை ஆட்கள் இன்றி நாமே சுத்தம் செய்யலாம். காரை எளிதாக கழுவலாம். செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் போன்ற பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தலாம். தரை, சுவர்கள், ஜன்னல் உள்ளிட்டவைகளை சுலபமாக சுத்தம் செய்ய உங்களுக்கு பிடித்தமான வகையில் விற்பனை செய்யப்படும். இதற்காக அரங்கமும் புதுச்சேரி எஸ்போவில் அமைந்துள்ளது.