/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை தாக்கிய தொழிலாளி மீது வழக்குப் பதிவு
/
பெண்ணை தாக்கிய தொழிலாளி மீது வழக்குப் பதிவு
ADDED : ஆக 06, 2025 12:44 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பெண்ணை தாக்கிய தொழிலாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் ரோஜா நகர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மனைவி காயத்ரி, 45. இவருக்கும், விழுப்புரம் பானாம்பட்டு காந்தி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணக்குமார்,44; என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இதன் காரணமாக, காயத்ரி வீட்டிற்கு சென்று சரவணக்குமார் தகராறு செய்தார். மேலும் காயத்ரி, அவரது கணவர் உதயகுமாரை தாக்கியதுடன், அவர்களது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை கல் வீசி சேதப்படுத்தியுள்ளார்.
இது குறித்து காயத்ரி கொடுத்த புகாரின் பேரில், சரவணக்குமார் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.