/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு புகுந்து கொள்ளை; போலீஸ் விசாரணை
/
வீடு புகுந்து கொள்ளை; போலீஸ் விசாரணை
ADDED : நவ 18, 2024 11:04 PM
விழுப்புரம் ; விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் நகை, வெள்ளி பொருள்களை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சாலாமேடு லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் பிரபு, 38; இவர், ராணிப்பேட்டையில் உள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் அவரது தாயார் ராஜேஸ்வரி உள்ளார்.
கடந்த 13ம் தேதி ராஜேஸ்வரி, தனது உறவினர் வீட்டிற்குச் சென்று, 17ம் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் ஜன்ல் கம்பி உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை மற்றும் 2 வெள்ளி டம்ளர்கள், ஒரு ஜோடி பெரிய வெள்ளி குத்து விளக்குகள் கொள்ளை போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

