நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வீடு இன்றி தாயாருடன், பொது இடத்தில் தங்கி வரும் தங்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டுமென வாலிபர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
விழுப்புரம் அருகே சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் தங்கதுரை, 30; நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்திற்கு வந்த இவர், கிராமத்தில் தனது தாய் சாரதாம்பாளுடன் வீடு இன்றி, பள்ளி கூடம், சமுதாய கூடம் உள்ளிட்ட பொது இடத்தில் தங்கியபடி அவதிப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.