/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கம் தோட்டக்கலை அதிகாரிகள் நேரில் ஆய்வு

ADDED : மே 01, 2025 05:14 AM
வானூர்: வானூரில் தென்னை மரங்களில் ரூகோஸ் எனப்படும் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
வானூர் மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகளில் தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளில் ரூகோஸ் வெள்ளை ஈ முக்கியமானது. தற்போது ஈக்கள் தாக்குதல் அதிகமாக உள்ளது. தென்னை மரங்களை வானூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கீதா ஆய்வு செய்து கூறியதாவது;
தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் பரவலாக உள்ளது. வெள்ளை ஈக்களின் தாக்குதல் அறிகுறிகள் பாதிப்படைந்த தென்னை ஓலையில் சுருள் சுருளாக வெள்ளை ஈக்கள் காணப்படும். ஓலையின் மேற்பகுதியில் கருப்பு நிற பூசணம் காணப்படும். பச்சையத்தை இழப்பதால் ஒளிச்சேர்கை செய்ய முடியாமல் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
வெள்ளை ஈக்கள் கட்டுபடுத்த மஞ்சள் நிற பாலத்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட இரண்டு புறமும் விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் (நீளம் 5 அடி, அகலம் 1.5 அடி) ஏக்கருக்கு 8 வீதம் 6 அடி உயரத்தில் தொங்கவிட வேண்டும். இல்லையென்றால், தென்னை மரங் களில் தண்டுப்பகுதியில் சுற்றியும் ஈக்களின் நடமாட்டத்தை கண்காணித்தும் அழிக்கலாம் என்றார்.