/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு பைக்குகள் மோதல் ஓட்டல் உரிமையாளர் பலி
/
இரு பைக்குகள் மோதல் ஓட்டல் உரிமையாளர் பலி
ADDED : ஆக 26, 2025 11:45 PM
திருவெண்ணெய்நல்லூர் : இரு பைக்குகள் மோதிக் கொண்டதில் ஓட்டல் உரிமையாளர் உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ராஜா, 45; ஓட்டல் உரிமையாளர்.
இவர் கடந்த, 22ம் தேதி மாலை, 6:30 மணியளவில் அரசூரில் இருந்து, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்றார். இருவேல்பட்டு ஏரிக்கரை அருகே சென்ற போது பின்னால் வந்த பைக், ராஜா ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ராஜா மற்றும் அவர் மீது மோதிய பைக்கில் இருந்த மணிகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர்.
தொடர்ந்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, மூவரும் சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜா நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.