/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., ஆட்சியில் எப்படி இருந்த நகராட்சி இப்படி மோசமாகி விட்டதே... : கவுன்சிலர் கவலை
/
அ.தி.மு.க., ஆட்சியில் எப்படி இருந்த நகராட்சி இப்படி மோசமாகி விட்டதே... : கவுன்சிலர் கவலை
அ.தி.மு.க., ஆட்சியில் எப்படி இருந்த நகராட்சி இப்படி மோசமாகி விட்டதே... : கவுன்சிலர் கவலை
அ.தி.மு.க., ஆட்சியில் எப்படி இருந்த நகராட்சி இப்படி மோசமாகி விட்டதே... : கவுன்சிலர் கவலை
ADDED : அக் 17, 2025 11:28 PM

விழுப்புரம்: அ.தி.மு.க., ஆட்சியில் நன்றாக இருந்த விழுப்புரம் நகராட்சி, தற்போது மோசமாகி விட்டது என கவுன்சிலர் குற்றம் சாட்டி பேசினார்.
விழுப்புரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் வசந்தி, நகர் நல அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:
தந்தை பெரியார் நகரில் கடந்த 3 ஆண்டுகளாக சாலைகள் சிதைந்து கிடக்கிறது. டெண்டர் விட்டு ஓராண்டுக்கும் மேலாக பணிகள் நடக்காமல் உள்ளது. நகரில் தெருநாய்கள் மற்றும் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அவைகளை பிடித்து அகற்ற வேண்டும்.
மழைக்காலம் தொடங்கியுள்ளாதல், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர், மழை நீர் தேங்காமல் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும். 39வது வார்டில் மழைநீர் வடிகால் வசதியே இல்லை. அரசு மகளிர் கல்லுாரி செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது.
சிங்கப்பூர் நகர் முதல் கே.கே.ரோடு சந்திப்பு வரை பிரதான சாலையை நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்.
நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரியில்லாததால் பல இடங்களில் கழிவுநீர் வழியும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பி.என்.தோப்பு நகராட்சி பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து பேசிய நகர மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
கவுன்சிலர் வாக்குவாதம் நகராட்சியின் முதல் வார்டில், தெருமின் விளக்குகள் சீர்படுத்த ஆளில்லை, குப்பைகள் தரம்பிரித்து எடுக்காமல் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. வார்டில் கடந்த 4 ஆண்டுகளாக அடிப்படை பிரச்னை தீர்க்காமல் உள்ளது. குப்பை டெண்டர் எடுத்தவர்கள் அதனை ஏன் சரியாக அகற்றுவதில்லை.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் எப்படி இருந்த நகராட்சி, இப்படி மோசமாகிவிட்டது என கவுன்சிலர் சேகர் பேசினார். அதற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பதிலளித்தபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கவுன்சிலர் சேகர் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார்.