/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனிதநேய மக்கள் கட்சி வணிகர் சங்க கூட்டம்
/
மனிதநேய மக்கள் கட்சி வணிகர் சங்க கூட்டம்
ADDED : ஏப் 07, 2025 06:32 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வணிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில பொருளாளர் அப்துல் அக்கீம் தலைமை தாங்கினார். செயலாளர் முஸ்தாக்தீன், கவுஸ்பாஷா முன்னிலை வகித்தனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வரும் மே 5ம் தேதி வணிகர் தினத்தையொட்டி மனிதநேய வணிகர் சங்கம் சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நலிவடைந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குவது.
வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் அனைத்து சமூக மக்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

