ADDED : ஜன 28, 2024 07:08 AM
அ நிறம் | அளவு
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் மனித நேய வாரவிழா நடைபெற்றது.
கண்டாச்சிபுரத்தில் நடந்த மனிதநேய வாரவிழா நிகழ்ச்சிக்கு ஊராட்சித்தலைவர் ஸ்ரீதேவிரவிக்குமார் தலைமை தாங்கினார்.இன்ஸ்பெக்டர் தீபா ,ஊராட்சி துணைத்தலைவர் ஜீவானந்தம், பழங்குடி நல அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அனந்தராமன் வரவேற்றார்.
டி.எஸ்.பி சுரேஷ், அரசு வழக்கறிஞர் கோதண்டபாணி,ஆய்வாளர் சித்ரா ஆகியோர் மனித நேயம் மற்றும் வாழ்வியல் முறைகள் குறித்து பேசினர். இதில் மகளிர் குழுவினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். புள்ளியியல் ஆய்வாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
